கேஎப்சி தொடர்பாக சைவபிரியர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி

கேஎப்சி உணவு கடையானது கொழிக்கறி உணவுகளுக்குப் பிரபலமான கடை என்ற நிலையில் விரைவில் சைவ பிரியர்களை ஈர்க்கும் படி ‘வெஜிட்டேரியன் பிரைடு கொழிக்கறி’ உணவை அறிமுகம் செய்ய இருக்கிறது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இதன் மூலம் கொழிக்கறி போன்ற சைவ உணவு வகைகள் விரைவில் கேஎப்சி-ல் கிடைக்கும் என்றும் அதிலும் மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் எல்லாம் இருக்கும் என்றும் கொழிக்கறி போன்ற சுவையினை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வெஜிட்டேரியன் பிரைடு கொழிக்கறி உற்பத்திக்கான பணிகள் துவக்க நிலையில் உள்ளதாகவும் அதில் என்னவெல்லாம் உபயோகப்படுத்த உள்ளோம் என்பது இரகசியமாகக் காக்கப்படும் என்றும் கேஎப்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த வெஜிட்டேரியன் பிரைடு கொழிக்கறி வகையினை வடிவமைத்துச் சோதனை முயற்சி செய்யப்படும் என்றும் 2019-ம் ஆண்டுச் சந்தை தேவைக்கு ஏற்றவாறு அனைத்துக் கடைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் கேஎப்சி நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் பகிர்ந்துகொண்டார்.

பிரிட்டிஷ் அரசு அதிகக் கலோரி உள்ள உணவு வகை மீது வரியினை உயர்த்திய காரணத்தினால் கேஎப்சி நிறுவனம் மாமிசங்கள் மட்டும் இல்லாமல் சைவ உணவுகளையும் அறிமுகம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

கேஎப்சி இங்கிலாந்து வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தங்களது உணவு வகைகளில் உள்ள 20 சதவீத கலோரியினை 2024-ம் ஆண்டுக்குள் குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கேஎப்சி-ன் போட்டி நிறுவனமான மெக் டொனால்ட் 2017-ம் ஆண்டு மெக்வீகன் பர்கர் என்ற உணவை தங்களது ரெஸ்டாரண்ட்களில் அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் அதற்கு நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது.

பிரட்டனில் கடந்த 6 ஆண்டுகளாக மாமிசத்திற்கு மாற்றான உணவுகள் மீதான தேவையும் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 2012-ம் ஆண்டு 239.5 மில்லியன் டாலரினை மாமிச மாற்று உணவுகளில் பிரிட்டன் மக்கள் செலவு செய்த நிலையில் 2017-ம் ஆண்டு அது 372.1 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

30Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*