சேலை வாங்­கித் தர­வில்லை: மாணவி எடுத்த தவ­றான முடிவு – யாழில் சம்­ப­வம்!

ஆலயத் தேர்த் திரு­வி­ழாவுக்குச் சேலை வாங்­கித் தரா­த­தால் மன­மு­டைந்த 18 வயது பாட­சாலை மாணவி தவ­றான முடி­வெ­டுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் கொடி­கா­மம் எரு­வ­னில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

வரணி சிட்­டி­வே­ரம் கண்­ணகை அம்­பாள் ஆல­யத்­தின் தேர்த் திரு­விழா நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. பள்­ளித் தோழி­கள் சேலை­யு­டன் வரு­வ­தால் தனக்கு சேலை வாங்­கித் தரு­மாறு தாயா­ரி­டம் கேட்­டுள்­ளார்.

இவ­ருக்கு புது உடை வாங்­கிக் கொடுத்­தால் ஏனைய இரு பிள்­ளை­க­ளுக்­கும் புது உடை­கள் வாங்க வேண்­டு­மென்­ப­தால் உடை­கள் வாங்­கிக் கொடுக்­க­வில்லை. மாணவி திரு­வி­ழா­வுக்­குச் செல்­ல­வில்லை.

நேற்று ஆல­யத்­தில் நடை­பெற்ற தீர்த்­தத் திரு­வி­ழா­வுக்கு வீட்­டி­லி­ருந்­தோர் சென்­றி­ருந்த வேளை­யில் மாணவி தவ­றான முடி­வெ­டுத்­துள்­ளார் என்று விசா­ர­ணை­க­ளின்­ போது தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆல­யத்­தி­லி­ருந்து வீடு திரும்­பிய குடும்­பத்­தி­னர் மாணவி தவ­றான முடி­வெ­டுத்­துள்­ளமை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்து கொடி­கா­மம் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

பொலி­ஸார் அங்கு வந்து சட­லத்தை மீட்டு சாவ­கச்­சேரி மருத்­து­வ­மனை சவச்­சா­லை­யில் ஒப்­ப­டைத்­துள்­ள­னர்.

இதே­வேளை, உயி­ரி­ழந்த மாண­வி­யின் குடும்­பத் தலை­வ­ரான தந்தை, தனி­யாக வாழ்ந்து வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

125Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*