யாழில் 10 நாட்களாக காணாமல் போன இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

கடந்த பத்து நாள்களாகக் காணாமற் போன உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலை யில் காயங்களுடன் நேற்று அதிகாலை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உடுப்பிட்டி வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த எ.ஜீவசங்கரி (வயது-26) என்ற இளைஞனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் கடந்த 29ஆம் திகதி வீட்டிலிருந்து இரவு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்று தெரிவித்து வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

வல்வை வீதியின் அருகே நேற்று அதிகாலை இளைஞனை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

கைகள் கட்டப்பட்டும், சத்தம் எழுப்பாதவாறு வாயில் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டும் உடம்பில் அடிக்காயங்களுடனும் மீட்கப்பட்ட இளைஞன் மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

46Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*