விக்கியைப் பார்த்து சுமந்திரன் விடும் சவால்

வடமாகாண சபையின் அடுத்த தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிச்சயம் க.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அடுத்த மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை களமிறக்க முடிவு செய்துள்ளீர்களா?என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த சுமந்திரன், கட்சியின் கொள்ளைகளை மறுதளித்து செயற்பட்ட ஒருவரை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த போவதில்லை என கூறினார்.

இந்த நிலையில், வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகபோட்டியிடுவதற்கு, தயார் என இலங்கை தமிழரசுக் கட்சியின்தலைவர் மாவை சேனாதிராஜா அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது க.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சியின் ஊடக தேர்தலுக்கு முகம் கொடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[embedyt]https://youtu.be/BfCAZorGvKg[/embedyt]

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*