வடக்கை உலுக்கிய பெண் குழந்தையின் சோக முடிவு! இறுதிச்சடங்கு உறுதியானது..

உடுவில் பெண் குழந்தையின் உயிரிழந்தாரா, உயிருடன் இருக்கிறாரா என்பதில் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

குழந்தை உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர். இதையடுத்து, குழந்தையின் இறுதிச் சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தை காய்ச்சல் பாதிக்கப்பட்டாள்.

குழந்தையை தெல்லிப்பளை வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு 4 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் காய்ச்சல் நீடித்தமையால் குழந்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு 11 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது. குழந்தையை சடலமாக புதன்கிழமை

நள்ளிரவு உறவினர்களிடம் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

குழந்தையின் இறுதிச் சடங்கு நேற்றுமுன்தினம் வீட்டில் நடைபெற்றுள்ளது. முற்பகல் 11 மணியளவில் குழ்ந்தையின் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியுள்ளது.

அதனால் குழந்தை உயிருடன் உள்ளது என சிலரால் நம்பிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து குழந்தையின் சடலம் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர் இந்து முறைப்படி வழிபாடும் நடைபெற்றுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டது என பெரியோர்கள், பெற்றோருக்கு எடுத்துக் கூறினர்.

[embedyt]https://youtu.be/9f0bgxdqFjI[/embedyt]

அதனையடுத்து சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச் சடங்கு நேற்று நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இறுதிச் சடங்கு இடம்பெறவிருந்த நிலையில் குழந்தை மலம் சலம் கழித்துள்ளார்.

அதனால் அவர் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இன்று காலை கடவுளிடம் மன்றாடி பெற்றோர் வழிபாடுகளில் ஈடுபட்டனர். எனினும் குழந்தை உயிரிழந்ததை தனியார் வைத்தியசாலையும் உறுதி செய்தது.

இந்த நிலையில் குழந்தையின் இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றுள்ளது

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*