பெற்ற பிள்ளைகளாலேயே அனாதையாக்கப்பட்ட வயோதிப தாய் – துன்புறுத்திய பிள்ளைகள்

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதை நாட்டில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தமது வயோதிப பெற்றோரை பிள்ளைகள் சரியாக பராமரிக்க வேண்டும் என்று எத்தனை விழிப்புணர்வு சமூகத்தால் வழங்கப்பட்டாலும் இப்படியான சில சம்பவங்கள் எமது சமூகத்தின் பின்நோக்கிய நிலையை காட்டி நிற்கின்றது.

வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சம்பவம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

பெற்ற பிள்ளைகளாலேயே அனாதையாக்கப்பட்ட வயோதிப தாய் – துன்புறுத்திய பிள்ளைகள்

பிள்ளைகள் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி வவுனியாவில் அநாதரவாக நின்ற வயோதிபத் தாய் ஒருவர் வவுனியா முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

83 வயதான ஆண்டிச்சி பழனியாண்டி எனும் குறித்த மூதாட்டி நேற்று கண்டி – தெல்தோட்டையில் இருந்து பேருந்தில் தனியாக புறப்பட்டு வவுனியாவிற்கு வந்துள்ளார்.

பெற்ற பிள்ளைகளாலேயே அனாதையாக்கப்பட்ட வயோதிப தாய் – துன்புறுத்திய பிள்ளைகள்

இதன் பின்னர் கோவில் குளம் சிவன் முதியோர் இல்லத்தில், மாவட்ட சமூக சேவை அலுவலகம் மூலம் வவுனியா பிராந்திய சுகாதார பணிமனை நிர்வாக உத்தியோகத்தர் விமலராணியின் உதவியுடன் வாகன ஒழுங்கு செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்.

பெற்ற பிள்ளைகள் தன்னை துன்புறுத்துவதாகக் கூறியே குறித்த வயோதிப தாயார் யாருக்கும் தெரியாது அதிகாலை விழித்தெழுந்து பேருந்து ஏறி வந்துள்ளார்.

பெற்ற பிள்ளைகளாலேயே அனாதையாக்கப்பட்ட வயோதிப தாய் – துன்புறுத்திய பிள்ளைகள்

இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில் வவுனியாவில், ஏனைய மாவட்டங்களில் அநாதரவாக விடப்படும் முதியவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதே.

ஸ்ரீலங்காவில், குருநாகல், கொழும்பு, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதியவர்கள் பலர் தெருவோரங்களிலும், வைத்தியசாலைகளிலும் அநாதரவாக விடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெற்ற பிள்ளைகளாலேயே அனாதையாக்கப்பட்ட வயோதிப தாய் – துன்புறுத்திய பிள்ளைகள்

ஓட்டுமொத்தமாக பார்க்கையில் தமது வயோதிப பெற்றோரை பராமரிக்க ஸ்ரீலங்காவில் பல பிள்ளைகள் தயார் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் ஆனால் சிரிக்கும் குருத்தோலையும் ஒருநாள் காவேலையாக மாறும்.

எனவே வயோதிப பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கும் அவர்களின் வயோதிப காலத்தில் இந்த நிலமைதான் என்பதை வயோதிப பெற்றோரை பராமரிக்க பின்நிற்கும் பிள்ளைகளுக்கு நினைவுபடுத்த வேண்டியது சமூகத்தின் கடமை.

எமது நாட்டு மக்களுக்கு தீர்க்கப்படாத பிரச்சனைகள் எத்தனையோ தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் இப்படியான பிரச்சனைகளும் உருவாகின்றமை கவலைக்குரிய விடயமே.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*