இலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர்.

அந்நிலையில் தற்போது குறித்த வங்கிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சிலர் தமது கணக்கினை மூடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

961Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*