உப சபாநாயகர் பதவி மூத்த உறுப்பினர்கருக்கு வழங்கப்பட வேண்டும் மதிராஜ் கருத்து

அங்கஐன் இராமநாதனிற்கு உபசபாநாயகர் பதவியை ஐனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

சபாநாயகர் பதவி என்பது மக்களின் விருப்பையும், பாராளுமன்ற உறுப்பினர்களினது நம்பிக்கையையும் வென்ற அனுபவம், முதிர்வு வாய்ந்த மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிற்கு வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை.என சுதேசிய மக்கள் கட்சியினுடைய பொதுச்செயலாளர் சந்தானகோபால் மதிராஜ் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாறாக சிறீலங்கா சுகந்திரக்கட்சி வடக்கில் தம்மைத்தாமே பலப்படுத்திக்கொள்ள ஒரு ஆயுதமாக உப சபாநாயகர் பதவிக்காக அங்கஜன் இராமநாதனை பரிந்துரைத்துள்ளாரோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ் மக்கள் எமது அடிப்படை உரிமைகளிற்காக குரல் கொடுக்கும் இந்நேரத்தில் இவ்வாறு பதவிகளை வாரி வழங்கி தமிழ் இணக்கவாதிகளின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடலாம் அதன் மூலமாக தமது வாக்கு வங்கியையும் பெருக்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் சுதந்திரக்கட்சியின் தலைவரும் நல்லாட்சி அரசின் பங்குதாரருமான மரியாதைக்குரிய மைத்திரிபால சிறிசேன திகழ்கின்றார்.

இவ்வாறு திட்டமிட்டு எம் உணர்வாளர்களையும் எம் மக்களையும் , பெரும்பான்மையோரின் பக்கம் ஈர்ப்பதற்கு கனகச்சிதமாக தமது முன்நகர்வுகளை நகர்த்துகின்றார்கள்.

ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, விலைவாசி உயர்வு,காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மீள்குடியேற்றம் எனப் பல கோணத்தில் விரிந்து வியாபித்து செல்லும் எமது அடிப்படைப் பிரச்சனைகளிற்கு மத்தியில் இந்த பதவிப்பரிந்துரை தேவையற்றது என அவர் தெரிவித்தார்.

14Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*