கோட்டாபயவால் சகோதரர்களிடையே குழப்பநிலை! மஹிந்த சீற்றம்

ராஜபக்ஷ சகோதரர்களிடையே சிலர் கூறுவதுபோல் எந்தவித முரண்பாடுகளும் காணப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திம்பிரிகஸ்யாய சாமவிகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ராஜபக்ஷ சகோதரர்களிடையே எந்தவித கருத்து முரண்பாடுகளும் இல்லை. நாம் ஒன்றாக இணைந்தே அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எமக்குள் முரண்பாடுகள் ஏற்படவேண்டுமென சிலர் விரும்புகின்றனர். அவர்களது விருப்பம் நிறைவேறாது. அடுத்த தேர்தலில் அவர்களுக்கான சிறந்த பதிலை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பசில் ராஜபக்ஷவுக்கும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் போட்டி நிலவி வருவதாகக்கூறி அரசியலில் சிலர் குழப்பநிலையினை ஏற்படுத்தி வருகின்றனர்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே பொருத்தமானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன கருத்துத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ உரிய நேரத்தில் தீர்மானத்தை மேற்கொள்வாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

30Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*