பெண்ணை கொலை செய்து சடலத்துக்கு நடந்த விபரீதம்

அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து சடலத்தை தீயிட்டு எரித்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

அட்லாண்டாவை சேர்ந்தவர் வாலிஸ் முகமது (48) இவர் அங்குள்ள ஒரு விடுதிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சென்ற நிலையில் லிண்டா ஜரார்ட் (60) என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

பின்னர் லிண்டாவின் அறைக்கு அவரை பின் தொடர்ந்து சென்ற வாலிஸ் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் வாலிஸை, லிண்டா எதிர்த்து போராடிய நிலையில் அவரை வாலிஸ் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின்னர் லிண்டாவின் சடலத்துடன் உறவு கொண்ட வாலிஸ் சடலத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த வாலிஸை கைது செய்த நிலையில் அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் வாலிஸ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், இதோடு தனியாக 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

14Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*