விபத்தில் உயிர் நீத்த நண்பனின் ஞாபகார்த்தமாக கரவெட்டி இளைஞர்களின் குருதிக் கொடை !

கரவெட்டி இளைஞர்களின் ஏற்பாட்டில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யோடு,அண்மையில் விபத்தில் காலமான தில்லையம்பல பிள்ளையார் ஆலய பூசகர் தி.கபிராஜ் ஞாபகார்த்தமாக கரவெட்டி இளைஞர்களின் குருதிக் கொடை வழங்கிய நிகழ்வு 13.05.2018 அன்று கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஜெ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வின் விருந்தினராக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சி.சுதோக்குமார் கலந்து சிறப்பித்தார்.

ஆரம்பத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் அமரர் தி.கபிராஜ் அவர்களின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடரும் ஏற்றப்பட்டு குருதிக் கொடை நிகழ்வு ஆரம்பமானது.இந் நிகழ்வில் 55 குருதி க் கொடையாளர்கள் குருதி க் கொடை வழங்கினார்கள்.

71Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*