தனது முதல் சம்பளத்தை ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுக்கு வாரி வழங்கிய யாழ் மாநகர சபை முஸ்லீம் உறுப்பினர்!!

யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் . நியாஸ் நிலாம் அவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. தனது முதல் மாதச் சம்பளத்தில் ஆனந்த சுதாகரனின் மழலைச்செல்வங்களின் குறைத்தீர்த்தார்.

நேற்று (11)அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் கிளைத்தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம் அவர்கள் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு விஜயம் செய்தார்.

அக்குடும்பத்திற்கு தனது ஆறுதலை கூறியததுடன், அப்பிள்ளைகளை தனது வாகனத்தில் ஏற்றி கிளிநொச்சி நகர்ப்புற கடைகளுக்கு அழைத்துச் சென்று அங்கு பிள்ளைகள் தாம் விரும்பி கைகாட்டியவற்றை தன் பிள்ளைகள் போல் எண்ணி வாங்கிக் கொடுத்ததுடன், மேலதிமாக வீட்டில் கல்வி கற்பதற்கான தளபாடங்கள், மகள் சங்கீதா ஆசைப்பட்டுக்கேட்ட பாடசாலைக்குச் செல்ல துவிச்சக்கர வண்டி மற்றும் பாதனிகள், வீட்டில் அணிவதற்கான ஆடைகள் என்பனவற்றை வாங்கி கொடுத்தார்.

அவர்களின் தந்தையின் விடுதலைக்காக தனது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என்றும் தெரிவித்துள்ளதுடன், இந்த நிலை வேறு எந்த பிள்ளைகளுக்கும் ஏற்படக்கூடாதென்று தனது ஆதங்கத்தை தெரிவித்ததுடன், ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இறைவனைப் பிரார்திப்பதுடன், இது தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிசாத் பதியூதினூடாக அரச தலைவருடன் தொடர்ந்தும் இவரின் விடுதலைக்காக பேசுவதாக உறுதி படத்தெரிவித்து பிள்ளைகளின் மன மகிழ்வைப்பார்த்து மன நிறைவுடன் திரும்பியுள்ளார்.

வடமாகாணத்தில் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் வாதிகளில் ஒரு சிலரைத் தவிர, ஏனையோர் இந்த சின்னஞ்சிறார்கள் தொடர்பிலும் ஏனைய ஏழைத் தமிழ் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாத நிலையில், யாழ் மாநகர சபை உறுப்பினரின் செயல் குறித்து தமிழ் மக்கள் மட்டுமல்ல நாட்டிலுள்ள முஸ்லீம்களும் பெருமை கொள்கிறார்கள்.

இவ்வாறான மக்கள் பிரதிநிதிகளே நாட்டிற்கு தேவை.இதைப் பார்த்தாவது திருந்துவார்களா நமது தமிழ் அரசியல் வாதிகள்….?

613Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*