ஆனல்டிற்கு அடங்க மறுத்த யோகேஸ்வரி!

யாழ். மாநகர சபையின் 2ஆவது அமர்வானது யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று ஆரம்பமாகியபோது மாநகர சபையின் மாண்பினைப் பேணும் வகையில் சபையில் எழுந்துநின்று கருத்துக்களை தெரிவிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் முன்னாள் மாநகர முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜாவை கேட்டுள்ளார்.

Loading...

[embedyt]https://youtu.be/P617osFBi4k[/embedyt]

பலமுறை கருத்து தெரிவித்தபோதும், அவர் எழுந்து நிற்கவில்லை. எழுந்து நின்று கருத்து தெரிவிக்குமாறு முதல்வர் பலமுறை குறிப்பிட்டார். காலில் சத்திரசிகிச்சை மேற்கொண்டமையினால் அதிக நேரம் எழுந்துநிற்க முடியாதென யோகேஸ்வரி கூற, மருத்துவ அறிக்கையினை சமர்ப்பித்த பின்னரே உட்கார்ந்து பேச முடியுமென முதல்வர் கூறினார். மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதாக யோகேஸ்வரி பதிலளித்தார்.

பின்னரும், உட்கார்ந்த நிலையிலேயே கருத்துக்களை தெரிவித்தார். கடந்த அமர்வின் கூட்ட அறிக்கை உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவ்வறிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இது குறித்து சபையின் கவனத்திற்கு தெரிவித்த அவ்வுறுப்பினருக்கு ஆதரவாக முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தனது கருத்தினை இருக்கையில் அமர்ந்தவாறே தெரிவித்திருந்தார்.

இதேவேளை, யாழ்மாநகரசபைக்கு சொந்தமான 5 மாடி கட்டிட ஊழல் விசாரணையை விரைவில் ஆரம்பிப்பதாக ஆனல்ட் அறிவித்தார்.

அத்துடன் அந்த கட்டிட தொகுதியில் வாடகை செலுத்தாமல் அலுவலகம் அமைத்துள்ள ஈ.பி.டி.பியின் டிடி தொலைக்காட்சி அங்கிருந்து அகற்றப்படுமென்றும் ஆனல்ட் அறிவித்தார்.

34Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*