மட்டக்களப்பு இளம்பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியானது

மட்டக்களப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளம் பெண்ணின் கணவன் பொலிசில் சரணடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணுகோயில் வீதியை சேர்ந்த 24 வயதான ஏ.டிசாந்தினி என்ற இளம் குடும்பபெண் தூக்கிட்டு தற்கொலை சம்பவம்.

ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சம்பவ இடத்திற்கு சென்று மரணவிசாரணை நடத்தினார். இதையடுத்து, பெண்ணின் உடல் பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இவரது மரணத்திற்கான காரணமும் விசாரணையில் வெளியாகியுள்ளது. இவரது கணவன் தொழிலுக்கு செல்வதில்லை. இதனால் அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்படும்.

கணவனை மத்திய கிழக்கிற்கு அனுப்ப மேற்கொண்ட முயற்சியால் டிசாந்தினி பெரும் பணநெருக்கடிக்குள்ளாகியிருந்தார். அவர் கூலித்தொழிலுக்கு செல்ல முயன்றபோது, கணவன் அதையும் அனுமதிக்கவில்லை. இது கடும் வாய்த்தர்க்கமாக ஏற்பட்டதையடுத்து, டிசாந்தினி கழுத்தில் தூக்கிட்டுள்ளார்.

அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அவர் உயிரிழந்துவிட்டார். இதன்பின்னர் கணவர் ஏறாவூர் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஆயினும் குடும்ப உறவினர்கள்- இந்த மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டதையடுத்து சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

80Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*