விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் முல்லைத்தீவில் திடீர் மரணம்

முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய குறித்த போராளி இறுதி யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு பெற்ற நிலையில் சுயதொழில் ஒன்றில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கடுமையான நோய் தாக்கத்திற்கு உள்ளான நிலையில் அவர் தனது நோயினை குணப்படுத்த உதவி கோரி பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத தருணத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

47Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*