தமிழரசிற்கு முள்ளிவாய்க்காலில் பாவவிமோசனம்?

Loading...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழரசுகட்சியின் நினைவேந்தல் நிகழ்வாக்கும் முயற்சியில் சிலர் மும்முரம் காட்டிவருவதாக சொல்லப்படுகின்றது.

அவ்வகையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான கசப்புணர்வுகளிற்கு மருந்து பூசவும் தற்போது கூட்டமைப்பு மீதான மக்களின் வெறுப்புணர்விற்கு வெள்ளையடிக்கவுமே தற்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் சிலரை பயன்படுத்த தமிழரசு தலைமை முற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மாணவர் ஒன்றியத்தின் பேரில் கூட்டமைப்பிற்கு ஆதரவான அறிக்கையொன்றை தயாரித்து தரப்புக்களே இம்முறையும் முள்ளிவாய்க்காலிற்கு களமிறங்கியுள்ளன.

இதுவரை காலமும் முள்ளிவாய்க்காலில் பொதுநினைவஞ்சலியை வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனே நடத்த ஏற்பாடுகளை செய்துவந்திருந்தார்.முன்னதாக ஈபிஆர்எல்எவ் சார்பு உறுப்பினராக இருந்த அவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்தி நினைவேந்தலை நடத்திவந்திருந்தார்.

எனினும் கடந்த ஆண்டு சீ.வி.கே.சிவஞானம் மற்றும் சத்தியலிங்கத்துடன் நடத்தப்பட்ட பேரம் பேசலின் அடிப்படையில் தமிழரசுக்கட்சிக்க இணைந்து கொண்ட அவர் இரா.சம்பந்தனிற்கு முன்னுரிமை வழங்க முற்பட்ட மக்கள் எதிர்ப்பு வெளிக்கிழம்பியிருந்தது தெரிந்ததே.

இந்நிலையில் இம்முறை முதலமைச்சரிற்கு முன்னுரிமை வழங்க கூடாதென்ற நிபந்தனை து.ரவிகரனிற்கு பிறபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரில் அறிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே முள்ளிவாய்க்கல் நினைவேந்தலுக்கு வருவோரில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டாமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இந்நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கலந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஒரே நிகழ்வாக தமிழ்த் தேசியத்தை மீளெழுச்சி கொள்ளச் செய்யும் நிகழ்வாகக் கடைப்பிடிக்க வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சில நாட்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சந்தேகத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்.

“பிழையான சிலருக்கும் அவர்களுடைய பிழைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியாக இது இருக்குமோ என நாங்கள் சந்தேகிக்கிறோமென அவர் ஊடகவியலாளர்கள் முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கஜேந்திரகுமாருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

இதன் போதும் இரு தரப்புகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கவில்லை.

கடந்த சில வருடங்களாக முன்னணி மற்றும் மதத்தலைவர்கள் தனித்து நினைவேந்தலை நடத்திவருவது தெரிந்ததே.

12Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*