நக்கினார் நா இழந்தார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யும்படி ஏன் எமது தமிழ் தலைவர்களால் கேட்க முடியவில்லை?

விடுதலை செய்யும்படி கோராவிட்டாலும் உறுதியளித்தபடி ஏன் விடுதலை செய்யவில்லை என்பதைக்கூட ஏன் அவர்களால் கேட்க முடியவில்லை?

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யும்படி கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் உணர்வுகூட இந்த தலைவர்களுக்கு ஏன் இல்லை?

இவர்கள் தமக்கு பதவி, பணம், பட்டம் என்று சலுகைகளைக் கேட்டுப் பெற்றதால் மக்களுக்காக குரல் கொடுக்க முடியாமல் உள்ளனர்.

இப்படி சில தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வருவார்கள் என்று உணர்ந்தபடியால்தான் நம் முன்னோர்கள் “ நக்கினார் நாவிழந்தார்” என்று முன்னரே எமக்கு கூறி வைத்திருக்கிறார்கள்.

பாலன் தோழர்

17Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*