அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 பேரும் மஹிந்தவுக்கு எதிரானவர்களா?

அரசாங்கத்துடன் இருந்து வெளியேறி வந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் எனக்கு குறைவாக ஏசியவர்கள் எனவும் அவர்களில் நம்பிக்கை வைக்கலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அரசியலில் ஏசுவதும் பேசுவதும் சகஜம். அரசியலில் பேசுவதை வைத்துப் பார்த்தால் நான் இவ்வளவுக்கு அரசியலிலிருந்து ஒதுங்கி வீட்டில் இருந்திருக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. சுட்டிக்காட்டினார்.

நாம் அடுத்த தேர்தலை விரைவுபடுத்தி ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தைக் கைப்பற்றி நாட்டை சிறந்த வழியில் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

7Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*