இலங்கையில் இப்படி ஒரு முஸ்லிம் கோடீஸ்வரா? பார்த்தால் வியந்திடுவீர்கள்…

Loading...

முஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்

போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள், உள்ளதாக புழுகு மூடைகளைக் கட்டவிழ்க்கப் போய் சிங்கள -முஸ்லிம் உறவைச் சிதைத்து இன மோதலுக்குத்தான் வழிவகுக்கப் பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் எழுந்த கர்ப்பத்தடை மாத்திரை சமாசாரம் நாட்டையே பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.

உணவு உண்டபின் நான்கு மணித்தி யாலங்களில் மலமாகி கழிவறைக்குள் தள்ளப்படும் கொத்துரொட்டியில் கர்ப்பத் தடை மாத்திரை இருந்ததாக சொல்லும் மாயமந்திரத்தால் அம்பாறையில் மூண்ட தீ கண்டியில் புகுந்து விளையாடியது.

தனிப்பட்ட பிரச்சினையால் மூண்ட சண்டையில் மாண்டு போன ஒரு யிரை முன்வைத்து சிங்கள- முஸ்லிம் சமூகங்கள் ஒன்றையொன்று வெறுப் போடும், பகைமை உணர்வோடும் நோக்கும் நிலைக்குத் தள்ளியுள்ள மைதான் கண்ட பலன்.

இப்படியான கலாசாரம் ஒன்று வளர்க்கப்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் இன, மத, குல பேதங்களை யெல்லாம் புறந்தள்ளிக்கொண்டு இயங்கும் இலவச உணவகமொன்று எங்கள் கண்களுக்கும் நல் விருந்த ளித்துக் கொண்டிருக்கிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகேயுள்ள டீ சேரம் வீதியில் விபுலசேன மாவத்தை என்ற ஒழுங்கையொன்று ஊடறுத்துச் செல்கிறது.

அந்த ஒழுங் கைக்குள் திரும்பியதும் இடப்பக்கமாக 150 ஏ இலக்கத்திலேயே கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் அந்த மகத்தான மக்கள் உணவகம் காட்சி தருகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசா லைக்கு அன்றாடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவர்களோடு துணைக்கு வருவோர்…

என்றெல்லாம் அனைவருக்கும் காலை வேளை பகல் வேளை என்று பசியார் முற்றிலும் இலவசமாக உணவுகள் பரிமாறப்படுகின்றன.

முஸ்லிம் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் தாராளத் தன்மையின் வெளிப் பாடாக மக்களைப் போஷிக்கும் இந்த அரும்பெரும் உணவகம் வழி நடத் தப்பட்டு வருகிறது.

இங்கு மட்டுமல் லாது களுபோவில வைத்தியசாலை, மஹரகம புற்றுநோயாளர் வைத்திய சாலைபோன்ற இடங்களுக்கு அருகாமையிலும் இப்பரோபகாரியின் இலவச உணவகங்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன.

அன்றாடம் காலை, பகல், இருவேளை ஆகாரங்கள் இன, மத, குல பேதங்களுக்கப்பால் வருவோர் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையை மையமாக வைத்து அதன் அருகே அமையப் பெற்றுள்ள புண்ணிய உணவகம் முஹம்மது நாஸர் என்ற முஸ்லிம் செல்வந்த பரோப காரியாலே வழிநடத்தப்பட்டு வருகி றது.

இந்த உணவகத்தில் சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களையும் சார்ந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

சம்பளத்திற்கு பணியாளர்களை அமர்த்தியபோதிலும் முற்றிலும் இலவச மாகவே உணவுகள் வழங்கிவரும் இந்த செல்வந்தர் ஆத்ம திருப்தி ஒன்றையே எதிர்பார்த்து இக் காரியத்தில் தன்னை அர்ப்பணித்து வருகிறார்.

தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு நாட்டின் தூர இடங்களில் இருந்தும் கொழும்புக்கு அயல் பிரதேசங்களில் இருந்தும் பெருந்தொகையானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இவர்களுக்குப் புறம்பாக வைத்தியசா லையின் விலங்கு நோய்ப் பிரிவு, சிறு நீரக பிரிவு போன்ற பிரிவுகளுக்கும் அநுராதபுரம், புத்தளம், பொலன்ன றுவை, வவுனியா, அம்பாறை, ஹம் பாந்தோட்டை மலையகப் பகுதி 2 போன்ற இடங்களில் இருந்தெல்லாம் வருவோருக்கு இந்த உணவகமே வரப்பிரசாதமாக அமைகிறது.

மேற் படி வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் உள்ள வியாபார நோக் கிலான உணவகங்களில் கொள்ளை விலைகளிலே உணவு சிற்றுண்டி வகைகள் விற்கப்படுகின்றன. அங்கும் சுத்தம், சுகாதாரம் கூட பேணப்படு வது குறைவு.

இந்த இலட்சணத்தில் தூர இடங்களில் இருந்து வருவோர் பணிஸ் போன்ற எளிமையான சிற் றுண்டிகளையோ, தேநீர், தண்ணீ ரையோ மாத்திரம் எடுத்துக் கொண்டு அரைகுறை வயிற்றோடுதான் செல் கின்றனர்.

இந் நிலையில் மேற்படி அன்னதான உணவகத்தின் புண்ணிய பணி சொல்லுந்தரமன்றல்லவா?

அதிகாலையிலோ அல்லது முதல் நாள் இரவோ வந்து வைத்தியசாலை வட்டாரத்தில் அங்குமிங்கும் தங்கி, வரிசையில் இடம்பிடித்து மருந்தெ டுத்துச் செல்கையில் எத்தனையோ இடர்பாடுகளுக்கு முகம் கொடுப்பது இயல்பு.

இப்படி வரும் நோயாளிகளும் அவருக்குத் துணையாக வருபவர் களும் வசதி படைத்தவர்கள் அல்லர். வசதியிருப்பின் இவர்கள் தனியார் வைத்திய நிலையங்களையல்லவா நாடுவார்கள்,

இத்தகையோருக்கு ஒரு கவளம் உணவேனும் புண்ணியமாகக் கிடைப் பதென்றால் அது அமிர்தத்திலும் மேலாகவே இவ் ஏழை மக்கள் கருதுவதில் தப்பில்லை , இங்கு வந்து உணவு உட்கொண்டு, பசியாறுவோர், இது முஸ்லிம் உணவகம் என்று புறக்கணிப்புச் செய்வ தில்லை ,

இங்கு கர்ப்பத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக சந்தேகிப்பதில்லை . இஸ்லாம் சமயத்துக்கு உள்ளீர்ப்பதாக பீதி கொள்வதில்லை . இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவது மில்லை. இன்று உண்டுகளித்தவர் நாளை மீண்டும் சிகிச்சைக்கு வர வேண்டியிருக்கும்.

அல்லது நாளை மறுநாளோ அல்லது ஒருவாரம், இரு வாரங்கள் ஏன் ஒரு மாதம் கழித்தோ சிகிச்சைக்கு மீண்டும் வரும் தேவை யுள்ளோர் இங்கு வந்து மீண்டும் மீண்டும் உண்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர், அந்தளவுக்கு திருப்தியான உணவு, அன்பான உபசரிப்பு, சுய சேவையில் தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி இப் படிப் பல நன்மைகள்,

ஏழைகளின் பசி போக்க ஐந்து சதமேனும் ஈயாத பலர் இனவாதம் குறித்து தீ மூட்டித் திரிகின்றனர். இத்தகையோரின் கண்களுக்கு முஸ்லிம் ஒருவர் நடத்தும் இப்புண் ணிய இடம் தென்படுவதில்லை . 500 பேரை இலக்கு வைத்தே பகல் உணவு தயாரிக்கப்படுகிறது. ஆனால் இத்தொ கையையும் தாண்டி வருவோருக்கும் சமாளித்து உணவு பரிமாறப்படுவது வழக்கம்.

இஸ்லாமிய சமயத்தில் இறைவனை வணங்குவது போன்றே பிறருக்கும் இயன்ற வரையில் உதவி, உபகா ரங்கள் செய்வதும் ஒரு வணக்கம் என்றே வலியுறுத்தப்படுகிறதாம்.

வேத நூல் குர்ஆனிலும் வணக் கத்தை எடுத்துச் சொல்லும் அதே தொடரில் தருமம் செய்வதன் அவ சியமும் எடுத்தோதப்பட்டுள்ளதாம். இதனால் சிறு வயதிலிருந்தே இச்செயற்பாட்டுக்கு முஸ்லிம்கள் பழக் கப்படுகிறார்கள்.

எனவே இத்தகைய உணவகங்கள் முஸ்லிம்களால் வழி நடத்தப்படுவது ஒன்றும் ஆச்சரியப்ப டுவதற்கில்லை . புத்த தர்மத்திலும் தர்மம் செய்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. புத் தசமயத்தின் ‘சிங்கா லோவாத’ சூத்தி

செய்தல், அடுத்தவருக்கு உதவுதல் என்பன மனித தர்மமாகும் என்று போதிக்கப்பட்டுள்ளது. அப்படியி ருந்தும் அப்போதனைகள் பின்பற் றப்படுவதில்லை. இன்று அந்தந்த மதங்களைப் பின்பற்றுவோர் அந் தந்த மதங்களைச் சேர்ந்தோருக்கு மட்டுமே தான தர்மங்களைச் செய்கி றார்கள்.

இந்த நிலைக்கு சமூகத்தில் வேற்றுமை மனோ நிலை வேரூன் றியுள்ளது. இத்தகைய சமூக அமைப் புக்குள்தான் மேற்படி புண்ணிய உண வகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

காலை வேளை 150 பேருக்கும் பகல் வேளை 450-500 பேருக்கும் இலவச உணவு வழங்கப்படுகி றது. மீன் கறியும் இரண்டு அல்லது மூன்று மரக்கறி வகைகளுடன் கூடிய சோறு வழங்கப்படுகி றது. சில சந்தர்ப்பங்களில் கோழி புரியாணியும் பரிமாறப்படுகிறது. கை, கால், முகம் கழுவுவதற்கும் புறம்பான அறையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் மலசலகூட வசதிகளும் உள்ளன. ஆரம்பத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறு இடத்தில் தான் நடத்தப்பட்டு வந்தது. இன்று பரந்த மனம் போல பரந்து பட்ட இடம் ஒன்றில் அழகிய பூச்செடி, கொடிகள் மத்தியில் கண்ணைக் கவரும் விதத்தில் இந்த உணவகம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

உணவுத் துணிக்கைகளோ, கடதாசித் துண்டுகளோ கீழே சிதறிக் கிடக்காதவாறு உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகின்றது. இங்கு வந்து பயன்பெற்றுச் செல்வோர் உணவக உரிமையாளரான முஹம்மத் நாஸருக்கு புண்ணியம் கிடைக்க வேண்டுமென ஆசிர்வதிக்கும் போது எனக்கல்ல, இறைவனுக்கு நன்றி தெரிவியுங்கள் என்றே அவர் கூறுவதையும் அவதானிக்க முடிகிறது.

நன்றி: மவ்பிம / விடிவெள்ளி

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*