கல்குடா வலயத்துக்கு 3000 வினாத்தாள்கள் வழங்கல்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசனினால் மாணவர்களிடத்தில் கல்வியை வளர்ப்போம் என்னும் தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.

அந்த வகையில் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் 2018இல் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான 3000 இலவச முன்னோடி வினாத்தாள் வெள்ளிக்கிழமை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவியிடம் கையளிக்கப்பட்டது.

கனடாவின் பொக்கிஷம் அமைப்பினரிடத்தில் பொக்கிஷ அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினரும்¸ வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசன் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் 3500 இலவச முன்னோடி வினாத்தாள்களை வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வில் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.யோகேஸ்வரன்¸ முறைசாராக் கல்விப் பணிப்பாளர் செல்வி.சீ.யோகேஸ்வரி¸ சமூக ஆர்வலர் எஸ்.பரராசசேகரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு மேலதிகமாக உள்ள 500 வினாத்தாள் ஓட்டமாவாடி கல்விக் கோட்டத்திலுல் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள் தேவையுள்ள பாடசாலைக்கு வழங்கப்படும் என பொக்கிஷ அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினரும்¸ வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசன் தெரிவித்தார்.

8Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*