அடங்காப்பற்றின் வணங்காமுடி! வன்னிய மரபின் பெயர் காத்த மாவீரன் குலசேகரம் வயிரமுத்து பண்டாரம் வன்னியனார் அவர்கள்,

வெள்ளையரின் கோட்டையை தாக்கியழித்து பீரங்கிகளை கைப்பற்றி சென்ற முல்லைத்தீவு நகரில்,

Loading...

எஞ்சியுள்ள கோட்டையின் சிதிலங்களை பார்த்தபடி எழுந்தருளியிருக்கின்ற திருவுருவம்!

காணாத எம்மினத்தின் வீரனை, தொழுது பின்பற்றும் வன்னிமையின் வீரத்தை கண்முன்கொணர்ந்து நிறுத்தியுள்ள திருவுருவம் அமைந்து இன்றோடு ஆண்டு ஒன்று பூர்த்தியாகியுள்ளது.

வன்னிய மரபின் வழிபாட்டு முதன்மைகளை முன்னிறுத்தி மாவீரனுக்கான வழிபாடுகளை இத்திருவுருவத்தின் முன்றிலில் தொடரவேண்டுமென – சொல் செயல் சிந்தனைகளால் இணைந்தோடுகிற,

அன்புத்தம்பி ஜெகதீசன் கோபிநாத் (Kobi Nishan) – இச்சிலையின் முன்னால் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், மாவட்டப்பதிவாளராக கடமையாற்றி வருகின்றார்.

வரலாற்றுப்பட்டதாரியான கோபிநாத்தின் தமிழுணர்வை வார்த்தைகளால் சொல்வதை விட இன்றளவும் என்னிடம் நினைவிலிருக்கும் சம்பவமொன்றால் மீட்டிடல் பொருத்தமாகும்.

மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடம் அமைந்துள்ள வளாகம், பழைய ஆங்கிலேய கோட்டை அமைந்திருந்த வளாகத்தையும் சேர்த்திருக்கின்றது. புதிய கட்டட பணிகள் நடைபெற்று கொண்டிருந்த ஒரு நாள் பிற்பகலில் – பண்டாரம் வன்னியனாரின் நினைவாக இப்போதும் எஞ்சியிருக்கும் ஆங்கிலேய கோட்டையின் சிதைவுகளை – கனரக இயந்திரம் மூலம் முழுமையாக அகற்ற கட்டட ஒப்பந்தக்காரர்கள் முயற்சிக்கின்றார்கள் என்ற செய்தி கோபிநாத்துக்கு கிடைக்கிறது.

அரசவிடுதிக்கும் – மாவட்ட செயலகத்துக்குமிடையிலான தூரத்தை கடக்க, இரவல் வாங்கிய சைக்கிளில் மூச்சிரைக்க ஓடிச்சென்று – மாவட்ட செயலருக்கு நிலைமையை புரியவைத்து – தற்சமயமும் எஞ்சியிருக்கும் கோட்டையின் சிதிலங்கள் அதேயிடத்தில் நிலைத்திருப்பதற்கு அன்புத்தம்பி கோபிநாத் முன்னோடி என்றால், அது மிகையில்லை!

காலையில் அழைப்பெடுத்து பேசிய போது இந்த நினைவுகளோடு – வேண்டுகோள் ஒன்றையும் உலகத்தமிழரிடம் சேர்ப்பிக்கும் கடமையை நினைவுறுத்தினார், மாவட்ட பதிவாளர்.

செங்கற்களையும் சுண்ணாம்பு சுதையையும் கொண்ட – பண்டாரம் வன்னியனார் வென்ற ஆங்கிலேய கோட்டை – வெயிலிலும் மழையிலும் அற நனைந்து அடியிலுள்ள கற்கள் பெயர்ந்து தகர்ந்து வீழும் நிலையிலிருக்கிறது.

அக்கறையற்ற இந்த நினைவுச்சின்னத்தை – மெதுவாக மீளமைத்து அடிக்கட்டுமானங்களை வலுப்படுத்தி – கொட்டகை ஒன்றினால் நிழற்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

இந்த புனரமைப்புக்கான பூர்வாங்க நடவடிக்கைகளுக்கு – நிதிஅனுசரணை தந்து தமிழ் மரபை நினைவுறுத்தி நிலைத்திருக்க நேசத்தமிழ் நெஞ்சங்களிடம் உதவி வேண்டி காத்திருக்கின்றார்.

ஆக ஐம்பதினாயிரம் பெறுமதியான இலங்கை பணத்தினால் நிறைவேற்றி விடக்கூடிய இப்பணியில் மனமொப்பும் அன்புள்ளங்கள் பெருந்தயவோடு தம்பி ஜெ.கோபிநாத்தை தொடர்புகொள்ள வேண்டுகின்றேன்.

// திரு ஜெகதீசன் கோபிநாத்

(இலங்கை பதிவாளர் சேவை)

மேலதிக மாவட்ட பதிவாளர்

மாவட்ட செயலகம், முல்லைத்தீவு

077 552 6921 //

தொழுவதற்கரிய வீரம் – விழுந்தழிந்து வீணாக்கிடக்கூடாது!!

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*