பிரபாகரன் என பெயர் சூட்டினார்! அதுதான் தில்லு!! நடிகர் சத்தியராஜ்

தனது மகனுக்கு பிரபாகரன் என விஜயகாந்த் பெயர் சூட்டியது தான் கெத்து தில்லு என பாராட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்தியராஜ் புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் திரையுலகுக்கு வந்து 40 வருடங்கள் முடிவடைவதற்கான பாராட்டு விழா கொண்டாடப்பட்டது.

இதில், கட்சி உறுப்பினர்கள், திரையுலக பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றம் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு, விஜயகாந்தை வாழ்த்தி பேசினர்.

இதில், சத்தியராஜ் கலந்துகொண்டு பேசுகையில், அள்ளிக்கொடுத்தவர் புரட்சிதலைவர் எம்ஜிஆர், அதை எங்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் புரட்சிகலைஞர் விஜயகாந்த் என வாழ்த்தி பேசினார்.

மேலும், கேட்காமலேயே அனைவருக்கும் உதவி செய்யும் விஜயகாந்தின் குணத்திற்கு ஏற்றாற்போல், அவருக்கு மனைவி பிரேமலதா அமைந்துள்ளார்,

தமிழகத்தில் திரைத்துறையில் இருந்து ஈழத்துக்கு நிதி கொடுத்த முதல் கலைஞன் விஜயகாந்த். அதுமட்டுமா, தன் மகனுக்கு பிரபாகரன் என பெயர்சூட்டினார். அதுதான் கெத்து…. அதுதான் தில்லு…அதுதான் தூளு.

அந்த அளவுக்கு தைரியமாகவும், அன்பானவராகவும் இருப்பதால் தான் அவரால், வாழ்க்கை, தொழில், அரசியல் என மூன்றிலும் ஜெயிக்கமுடிந்தது

இளைஞர்களுக்கு ஒன்று கூறிக்கொள்கிறேன், விஜயகாந்தின் நல்ல குணத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள், பிறகு அவரை பற்றி மீம்ஸ் போடலாமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அவரைப்பற்றி எதுவும் தெரியாமல் மீம்ஸ் போடாதீர்கள் என கூறியுள்ளார்.

61Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*