விடுதலைப் புலிகளை உதாரணம் காட்டிய பிரபல பேச்சாளர்

தமிழக பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர், தமிழர்கள் பண்பாட்டு விழுமியங்கள் கொண்டவர்கள் என்பதனை நிரூபிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளை உதாரணம் காட்டியுள்ளார்.

Loading...

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்திய செய்மதி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பட்டிமன்றமொன்றில் பேசிய பேச்சாளர் ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் தமிழர்களின் வாழ்வும் பண்பாடும் சிகரங்களை நோக்கி செல்கின்றதா, சிரமங்களை நோக்கி செல்கின்றதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்ற பிரபல பெண் பேச்சாளர் பர்வின் சுல்தானா, தமிழர் தம் பண்பாட்டு, கலாச்சார விழுமியங்களை போற்றிப் புகழ்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளை உதாரணம் காட்டியுள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் 30 இராணுவப் படையினர் பயணம் செய்த பஸ் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடாத்துவதற்கு ஆயத்தமாகியிருந்த வேளையில் அந்த வழியில் சிங்கள மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வந்ததாகவும், மாணவர்கள் குண்டுத் தாக்குதலில் இறந்து விடக் கூடாது என விடுதலைப் புலி போராளி தான் அந்த வெடியில் சிக்கி உயிரைத் தியாகம் செய்ததாகவும், பர்வின் சுல்தானா தனது பட்டிமன்றப் பேச்சில் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரபல இந்திய செய்மதி தொலைக்காட்சி ஒன்றில் இன்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*