இலங்கையில் உயிர்களை காவு எடுக்கும் மர்ம தேசம்! பலர் மரணம் – மக்களுக்கு எச்சரிக்கை!

வீடியோஇங்கே கிளிக் பண்ணி பாருங்கள்

அண்மைக் காலமாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சுற்றுலா சென்று 5 இளைஞர், யுவதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழப்பதற்கு பிரதான காரணமாக ஆழம் பற்றி தெரியாமல் குளிக்க செல்வதே என குறிப்பிடப்படுகின்றது.

புத்தாண்டு காலங்களில் பல சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். புதிய இடங்களுக்கு சென்று நீர் நிலைகளின் இறங்குகின்றனர்.

இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். நீர்வீழ்ச்சி, ஏரி, குளங்கள் தொடர்பிலும் அதன் ஆபத்துக்கள் தொடர்பிலும் நன்கு அறிந்து கொண்டு செல்லுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பெலிஹுல் என்ற ஆபத்தானநீர்வீழ்ச்சி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அந்த நீர்வீழ்ச்சியை பார்க்கும் போது நீர் மட்டம் மிகவும் குறைவாகவே காட்சியளிக்கும்.எனினும் நொடி பொழுதுகளில் அதன் நீர் மட்டம் திடீரென அதிகரித்து அங்கிருக்கும் அனைத்தையும் அடித்து செல்லும் என குறிப்பிடப்படுகின்றது.எனவே இது தொடர்பில் அறிந்த பின்னர் அவ்விடத்திற்கு செல்லுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

80Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*