கதிர்காமம் ஆலயத்தின் பொறுப்பாளர்கள் புத்தசாசன அமைச்சுக்கு அழைப்பு

9

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமத் தளத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் பூசகர்களை நாளை திங்கட்கிழமை புத்த சாசன அமைச்சுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமத்தளத்தில் பிரதான தேவாலயத்தின் திறப்பைக் கையளிப்பதில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கடந்த 22 ஆம் திகதி ஆலயத்தில் அதிகாலை பூசைகள் இடம்பெறவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அவர்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது