இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்!!

Loading...

இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய மின்சார தேவை ஏற்பட்ட தினம் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை இலங்கையில் அதியுச்ச தேவையாக 2500 மெகாவோட்ஸ் மின்சாரம் தேவைப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தேவை ஏற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மின்சாரம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதன் பின்னர் கடந்த 20ஆம் திகதி அதி கூடிய மின்சார தேவை ஏற்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சக்தி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ரம்புக்கன அரசாங்க வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

30Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*