சற்றுமுன்னர் நடராஜன் மரணம் – விதவையான சசிகலா

சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

Loading...

கடந்த சில நாள்களாக நடராசனுக்கு உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நடராசனைக் காண சசிகலாவுக்கு மீண்டும் பரோல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சை பலனளிக்காததால் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் நடராசன் இறந்தார் என தெரிகிறது. அவரது உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எம்பார்மிங் முடிந்த பின் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிகிறது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*