அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு கடிதம்.

Loading...

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு!

உங்களுக்கு வாக்களித்த,

இந்த நாட்டின் பிரஜை என்கின்ற வகையில் எனது தாழ்மையான அவசர வேண்டுகோளை செவிமடுப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஜனாதிபதி அவர்களே இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகமான தமிழ்,முஸ்லிம் மக்கள் வழங்கிய பங்களிப்பை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். முன்னர் விடுதலைப் புலிகளாக இருந்து அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்த பலர் இன்று அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக அல்லது அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாக மாறியுள்ள நிலவரம் நான்,நீங்கள்,இந்த நாட்டு மக்கள்,சர்வதேசம் அனைவரும் அறிந்த விடயமே.

ஆனால் அந்த யுத்த காலத்தில் வெறும் அம்புகளாக பாவிக்கப்பட்ட சில அப்பாவி தமிழ் இளைஞர்களை இன்னும் சிறையில் அடைத்து அவர்களின் வாழ்நாளையும்,வாலிபத்தையும் கேள்விக்குறியாக்கி கொண்டிருப்பதில் என்ன நியாயம் உள்ளது ஜனாதிபதி அவர்களே!

இந்த நாட்டில் நடந்து முடிந்த யுத்தமொன்றினை காரணம் காட்டி, எமது சகோதரர்களான தமிழ் வாலிபர்களை நீங்கள் கேள்வி பார்வை இன்றி அடைத்து வைத்திருப்பது உங்கள் மனசாட்சிக்கு சரியாக படுகின்றதா? ஆனந்த சுதாகர் என்ற பெயருடைய தமிழ் அப்பாவி இளைஞன் கடந்த பத்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

கௌரவ ஜனாதிபதி அவர்களே இப்போது சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகள் வெறும் அம்புகள் மாத்திரமே! அவர்கள் சூழ்நிலைக்கைதிகள், அவர்களுக்கும் ஒரு குடும்பம் உள்ளது, தாய்,தந்தை, அண்ணன்,தம்பி ,அக்கா ,தங்கை,மாமன் ,மச்சான், மனைவி,பிள்ளைகள் இப்படி எனக்கும்,உங்களுக்கும் இருப்பது போல ஒரு குடும்பமும், பல உறவுகளும் உள்ளன.

உங்கள் கருணைக்கண் அவர்கள் மீது படாதா? உங்கள் கருணைக்கண் எப்போதாவது படும் என்று தினமும் காத்துக்கிடக்கும் அப்பாவி ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அவர்களின் இருண்டு கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு ஒளி கொடுக்கும் சக்தி உங்கள் கரங்களில் தான் இருக்கிறது.

ஆனந்த் சுதாகரின் மனைவி இறந்து போனார் இரண்டு குழந்தைகளும் அனாதையாகிப்போனார்கள். அண்ணன் சுடுகாட்டுக்கு அம்மாவின் பூத்தவுடலுடன் செல்கின்றான். ஒன்றுமறியாத தங்கை தந்தையோடு சிறைச்சாலை பஸ்ஸில் ஏறுகிறாள். இதயத்தை கசக்கி பிழிந்து, கண்களை குளமாக்கிய அந்த புகைப்படங்களை நீங்கள் பார்த்தீர்களா?

ஜனாதிபதியவர்களே! ஒரு தந்தையாய் தனது பிள்ளையின் தலையினைக்கூட வருட முடியாத கையறுநிலையில் நீங்கள் இருந்ததுண்டா கௌரவ ஜனாதிபதி அவர்களே?

அந்த சிறுமியை போல எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், காலையிலும்,மாலையிலும்,இரவிலும்,பகலிலும் என்னை சுற்றிசுற்றியே அவள் வருவாள். அவளின் முத்தங்கள் இந்த உலகிலுள்ள எல்லா சுகங்களைவிடவும் இனிமையானது. அனாதையாக ஆக்கப்பட்ட அந்த சிறுமிக்கும் தனது தந்தை தொடர்பில் அவ்வாறான எண்ணங்கள் உதிக்காமலா போகும்?

கௌரவ ஜனாதிபதி அவர்களே! எத்தைனையோ குற்றவாளிகள் இன்று சர்வசாதாரணமாக,எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்ற போது அப்பாவியான ஆனந்த சுதாகர் போன்றோரை அடைத்து வைத்திருப்பதனால் நம் நாட்டுக்கு என்ன இலாபம் கிடைத்து விடப்போகின்றது. அவர்களும் சதையும் இரத்தமும் கொண்ட மனிதர்கள், அவர்களுக்கும் சுகதுக்கங்கள் உள்ளன, அவர்களுக்கும் இதயமும் அதில் ஈரமும் உள்ளது. அவர்களுக்கு வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அது உங்களுக்கு புண்ணியத்தை கொண்டு தரும். அவர்களின் விம்மலையும்,அழுகையையும் கொஞ்சம் காது தாழ்த்தி கேளுங்கள்.

கருணையும், இரக்கமும் கொண்ட இந்த நாட்டின் தலைவரே அந்த அப்பாவியான சின்ன சிட்டுக்குருவிகளின் வாழ்க்கையை அரத்தமுள்ளதாக்குங்கள். அது உங்களின் பொற்கரங்களில் தான் இருக்கிறது. ஆனந்த சுதாகரை விடுதலை செய்வதன் மூலம் நீங்கள் உண்மையிலேயே கருணையின் உருவம் தான் என்பதனை நிரூபியுங்கள். செய்வீர்களா? கௌரவ ஜனாதிபதி அவர்களே?

கண்ணீருடன்.

நாச்சியாதீவு பர்வீன்.

233/ A/3,Pansala Road.

Malwana.

0767877876.

[email protected]

2018.03.19

ගරු ජනාධිපතිතුමා,

ජනාධිපති කාර්යාලය,

ගාලූ පාර,

කොළඹ – 01

අතිගරු ජනාධිපතිතුමනි,

ඔබතුමාට ඡන්දය ලබා දුන් අප රටේ ප‍්‍රජාවක පුද්ගලයකු වශයෙන්, මාගේ නිහතමානී හදිසි ඉල්ලීම පිළිගනීවි කියල බලාපොරොත්තු වෙනවා. ජනාධිපතිතුමනි, මෙම යහපාලන රජය නිර්මාණය කිරීමේ දී මෙම රටේ සුළුජාතීන් වන දෙමළ, මුස්ලිම් ජනතාව ලබා දුන් සහයෝගය ඔබතුමා අමතක නොකරන බවට මම සිතනවා. කලින් එල්ටීටීඊ ය සමÕ එකතු වී රජයට එරෙහිව සටන් කළ ඇතම් අය අද ආණ්ඩුවේ සුරතලූන් වී හෝ නියෝජිතයන් ලෙසත් වෙනස් වී තිබෙන බව ඔබතුමාත්, මමත්, මෙම රටේ ජනතාව, ජාත්‍යන්තරය හැමෝම දන්නා කරුණකි. එහෙත් එම සටන පැවති කාලයේ දී සාමාන්‍ය මිනිසුන් හැටියට සිටි අහිංසක දෙමළ තරුණයින්ව තවමත් සිරගත කර ඔවුන්ගේ ජීවිතය හා යෞවනය, ප‍්‍රශ්නාර්ථයක් කරගෙන සිටීමෙන් ලැබෙන යුක්තිය කුමක්ද ජනාධිපතිතුමනි!

මෙම රට තුළ සිදුවූ යුද්ධයක් හේතුකරගෙන, අපේ සහෝදර දෙමළ තරුණයින්ව ඔබතුමා කිසිම හේතුවක් නැතිව සිරකර සිටීම ඔබතුමාගේ හෘදසාක්ෂියට හරි කියල දැනෙනවාද? ආනන්ද සුදාහර් යන නාමය ඇති අහිංසක තරුණයා අවුරුදු 10ක් තිස්සේ සිරකර තැබීම පිළිබ`දව ඔබතුමා දන්නවාද?

ගෞරවනීය ජනාධිපතිතුමනි, දැනට සිරගත වී සිටින දේශපාලන සිරකරුවෝ ද සාමාන්‍යය පුද්ගලයින් ය. ඔවුන්ටත් පවුලක් තිබේ. අම්මා, තාත්තා, අයියා, මල්ලි, අක්කා, නංගි, මාමා, මස්සිනා, බිරි|, දරුවන් කියා මටත් ඔබටත් තිබෙනවා සේම එක පවුලක් හා ඥාතීන් ඉන්නවා. ඔබතුමාගේ කරුණාව ඔවුන් හට ලැබේවි ද? ඔබතුමාගේ කරුණාව කවදාහරි එයාලට ලැබෙයි කියලා ඔවුන් සැමදා බලා සිටින අහිංසකයෝ ය. ඔවුන්ට ජීවත් වන්නට අවස්ථාවක් ලබා දෙන්න. කලූවර වී තිබෙන එයාලගේ ජීවිතයට එළියත් ලබා දීමේ ශක්තිය තිබෙන්නේ ඔබතුමාගේ දෑතේ ය.

දරුවන් දෙදනාව අනාතයන් බවට පත්කර, ආනන්ද සුදාහරන්ගේ බිරි| මරණයට පත්වීය. අයියා අම්මාගේ දේහය එක්ක කනත්තට යන විට, කිසිවක් නොදන්නා නංගී තාත්තා සමÕ බන්ධණාගාර බස් රථයට ගොඩවන්නේ කාගෙත් ඇස්වලට ක÷ලූ පුරවමින්. මෙම ඡdයාරූපය ඔබ දුටුවාද?

ඒ දැරිය වගේම මටත් දුවෙක් ඉන්නවා. උදේ සවස මා එක්කම කැරකි කැරකි කාලය ගතකරනවා. එයාගෙන් ලැබෙන හාදුවක් මේ ලෝකේ තිබෙන හැමදේකටම වඩා මිහිරි ය. අනාත වු ඒ දැරියට තම පියා ගැන එවැනි හැගීමක් ඇති නොවේවි ද?

ගෞරවනීය ජනාධිපතිතුමනි! මේ රට තුළ වරදකරුවන් බොහෝ දෙනෙක් අදවන විට කිසිම බලපෑමක් නැතිව සාමාන්‍යයෙන් නිදහසේ හැසිරෙන විට අහිංසක වූ ආනන්ද සුදාහර් වැනි අයව සිරකර තැබීමෙන් අපේ රටට මොන විදිහකින් ලාභයක් ඇතිවේවි ද? ඔහුත් ලේ, මස් තියෙන මනුස්සයෙකි. ඔහුටත් සැපදුක් තිබෙනවා. ඔහුටත් හෘදයක් හා හැගීමක් තිබෙනවා. ඔවුන්ටත් ජීවත්වන්න අවස්ථාවක් ලබා දෙන්න. එය ඔබතුමාටද එය බොහෝ පින් ඇතිකරවන දයකි. ඔවුන්ගේ හැගීම්වලටත් ටිකක් සවන් දෙන්න. දයාව හා කරුණාවට උරුමකම් කියන මේ රටේ නායකයා වශයෙන් ඒ අහිංසක කුඩා දරුවන්ගේ ජීවිතය අර්ථවත් කරන්න. එය තිබෙන්නේ ඔබතුමාගේ දෑතේ ය. ඇත්ත වශයෙන්ම ඔබතුමා කරුණාවන්තයි කියන එක, ආනන්ද සුදාහරන්ව නිදහස් කිරීමෙන් ඔප්පු කරන්න. ජනාධිපතිතුමානි ඔබතුමා ඒක ඉටුකරනවාද?

ඒ. ආර්. එම්. ෆර්වීන් (නාච්චියාදීවු ෆර්වීන්)

233/ A/3, පන්සල පාර,

මල්වාන.

0767877876

129Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*