சீமை அகத்தியின் அற்புத மருத்துவகுணங்கள்

சீமை அகத்தி பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

இது சீமை அகத்தியை சிற்றகத்தி, சாழை அகத்தி, முனி கரீரம், அச்சம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது.

இதன் இலை, மலர்கள், காய் மற்றும் மரப்பட்டைகள், உடல்நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை மருந்துகளில் பயன்படுகின்றன.

சீமை அகத்தியின் மருத்துவகுணங்கள்

• சீமை அகத்திச் செடியின் மஞ்சளும் பழுப்பும் கலந்த வண்ண மலர்களை சேகரித்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் அந்த மலர்களை நீரில் இட்டு, நன்கு சுண்டக் காய்ச்சி, அந்தநீர் தினமும் பருகி வர சிறுநீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.

• சீமை அகத்தி பட்டையை எடுத்து ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.

• படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய் எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்.

• சீமை அகத்திச் செடியின் இலை, பூ, விதை ஆகியவற்றை நீரிலிட்டு 15 நிமிடம் வரை நான்கு கொதிக்க வைக்கவேண்டும், பின் ஆறவைத்து தினமும் மூன்று வேலையும் உள்ளுக்கு குடிக்க வயிறு கோளாறுகள் குணமாகும்.

• கர்பிணிப்பெண்கள் இதனை அதிகம் உள்ளுக்கு எடுத்துக்கொள்ள கூடாது, அல்லது தவிர்த்து வேறு மூலிகையை பயன்படுத்தலாம்.

• வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்கு அரைத்து வண்டு கடிமீது காலையும் மாலையும் தடவினால் விரைவில் குணமடையும்.

• சீமை அகத்தியை பயன்படுத்தி நகச்சுற்றுக்கு மருந்து தயாரிக்கலாம்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*