வவுனியா பெண் புலியாந்தகல் ஆற்றில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் புலிபாய்ந்தகல் பாலத்திற்கு அருகில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

Loading...

கிரான் புலியாந்தகல் ஆற்றில் மீன்பிடிக்கத் தோணியில் சென்ற ஒருவர் பெண்ணொருவரின் சடலம் ஆற்றில் கரையொதுங்கி உள்ளதைக் கண்டு கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள பெண் வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த எஸ்.சுதர்சினி (வயது 33) என்று அவரது கடவுச் சீட்டின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்¸ இவர் சவூதி அரேபியா நாட்டில் பணிப்பெண்ணாக கடமை புரிந்து நாடு திரும்பியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பிரயாண பை ஒன்றும்¸ சமயலறை இலத்திரனியல் உபகரண பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்¸ இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட இரகசிய பொலிஸாரும்¸ வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவும் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*