சுமந்திரனுடனான சந்திப்பில் அருந்தவபாலன் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் அருந்தவபாலனின் “கிளர்ச்சி“யை எம்.பி பதவி நியமனம் வழங்கும் வாக்குறுதியின் மூலம் தமிழரசுக்கட்சி வெற்றிகரமாக கையாண்டுள்ளது.

Loading...

இரட்டை வழிகளில் நடத்தப்பட்ட இந்த முயற்சியின் பிரதான மூளையாக செயற்பட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் ஒருவர், தமிழ் பக்கத்திடம் கருத்து தெரிவிக்கும்போது-“இந்த விசயம் இவ்வளவு சுலபமாக தீர்க்கப்படுமென யாரும் எதிர்பார்க்கவில்லை“ என மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலனை சமரசப்படுத்தும் முயற்சியில் தமிழரசுக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதென்ற தகவலை முதலில் நாம் வெளியிட்டிருந்தோம்.

இரண்டு வேறுபட்ட வழிகளில், முன்னெடுக்கப்பட்ட இந்த நகர்வை, மாவை சேனாதிராசா தரப்பிலிருந்தும், சுமந்திரன் தரப்பிலிருந்தும் இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இரண்டு தரப்பின் மேல்மட்டத்திலும் மட்டும் கலந்துரையாடப்பட்ட இந்த திட்டத்தை, கீழ் மட்டத்தில் செயற்படுத்தியவர்கள் அறியவில்லை. முதலில் மாவை சேனாதிராசா தரப்பினர் அருந்தவபாலனை அணுகினார்கள்.

தமிழரசுக்கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் செயற்படும், மாவையின் நம்பிக்கைக்குரியவரான பிருந்தாவன் என்ற அரச உத்தியோகத்தரே முதற்கட்ட பேச்சுக்களை நடத்தினார்.

மாவை சேனாதிராசா, வடமாகாணசபை தேர்தலிற்காக பதவிவிலகினால் அந்த இடத்தில் அருந்தவபாலன் நியமிக்கப்படுவார் என உறுதியளித்தனர். (கட்சி அருந்தவபாலனை நியமிக்காவிட்டாலும், தேர்தல் திணைக்களம் அவரையே நியமிக்கும். விதிமுறையின்படி, அவரே அடுத்த எம்.பி)

இந்த நிலையில், வர்த்தகர் சங்க தலைவர் ஜெனா, வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரம் ஆகியோர் மூன்று வாரங்களின் முன்னர் அருந்தவபாலனை சந்தித்து சமரச பேச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து, எம்.ஏ.சுமந்திரனை சந்திக்கவும் சம்மதம் தெரிவித்தார்.

கடந்த 03ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தின் பின்னர், ஜெயசேகரத்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பில் அதிகம் சரணடையும் போக்கையே அருந்தவபாலன் வெளிப்படுத்தியுள்ளார். “நான் எந்தக்கட்டத்திலும் தமிழரசுக்கட்சியை விட்டு விலகவில்லை. இப்பொழுதும் கட்சியின் உறுப்பினர்தான்“ என நிமிடத்திற்கு ஒருமுறை சுமந்திரனிடம் கூறியபடியே இருந்தார் அருந்தவபாலன்.

இந்த சந்திப்பில், மாவை தரப்பிலிருந்து நடத்தப்பட்ட சமரச பேச்சை பற்றி ஜெயசேகரம் வெளிப்படுத்தவில்லை. “இரண்டரை வருடத்தில் என்னை எம்.பியாக நியமிக்க கட்சி வாக்களித்துள்ளது. அந்தகாலம் நெருங்கி வருகிறது“ என்று மட்டும் கூறினார்.

அருந்தவபாலன் தரப்பின் கட்சி தொடர்பான அதிருப்திகளை மத்திய குழுவிற்கு எழுதுவதென்று முடிவாகியுள்ளது.

அதேபோல, கட்சியின் பின்னடைவை ஆராயும் குழு சார்பில் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சுமந்திரனும், தனது அபிப்பிராயத்தை மத்தியகுழுவிற்கு சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பின்போது, தமிழ் மக்கள் பேரவை தொடர்பான பேச்சும் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்துகொள்வேன் என தான் வாக்களிக்காத போதும், விக்னேஸ்வரன் தனது பெயரை இணைத்துவிட்டார் என அருந்தவபாலன் கூறியுள்ளார்.

அதேவேளை, வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன், கடந்த தேர்தலில் சாவகச்சேரி வாக்காளர் பட்டியலை மாற்றியது தவறானது என சுமந்திரன் ஏற்றுக்கொண்டார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*