இந்த சிலை எதனை உணர்த்துகின்றது என தெரியுமா?

8
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

59 அடி உயரத்தில் காணப்படுத் இந்த சிலை எதனை உணர்த்துகின்றது என நீங்கள் அறிவீர்களா..

சரவணபெலகோலாவின் மலையில்தான் இந்த சிலை அமையப்பெற்றிருக்கின்றது.

இதற்கு கோமதீஸ்வரா சிலை என்றும் பெயர் காணப்படுகின்றது

இந்த சிலை ஒற்றைக்கல் சிலை என்பதும் ஆச்சரியம் அளிக்கின்றது

நீங்கள் சினிமாவில் பார்த்து வியந்த ‘பாகுபலி’யின் உண்மைக் கதை என்றுகூட இதைச் சொல்லலாம். இந்தியப் புராணங்கள் கொண்டாடும் அரசன் பரதனின் தம்பிதான் பாகுபலி.

தனது வீரத்தால், இந்திய தேசம் முழுக்கப் போரிட்டுக் கைப்பற்றிய பரதனுக்கு இறுதியாக வெல்வதற்கு ஒரேயொரு நாடுதான் இருந்தது. அது தென்னிந்தியாவில் தனக்குச் சமமான பலத்துடன் ஆண்டுகொண்டிருக்கும் தம்பி பாகுவின் கோட்டை.

தம்பியுடன் போர்புரியப் படையுடன் கிளம்பபினார் பரதன். பாகுவோ, இருவருக்குமிடையிலான உரிமைப் போருக்கு எதற்கு வீரர்களைப் பலியாக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தில் ஹநாம் இருவர் மட்டும் களத்தில் சந்திப்போமே..!’ எனக் கோரிக்கை விடுத்தார். அண்ணனும் தம்பியும் மட்டும் களத்தில் மோதிக்கொண்டார்கள்.

மல்யுத்தம்இ நீர்ச்சண்டை… என விரிந்த போட்டியில் பாகுபலியே ஜெயித்தார். இருந்தாலும்இ ராஜ்ஜிய மோகத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பால் நாடு துறந்துஇ வீடு துறந்து, உடைமை துறந்து, உடை துறந்து விந்தியகிரி மலையின் உச்சிக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டார்.

ஒரு வருடம் முழுக்க அசையாமல் நின்ற கோலத்திலேயே அவர் தவம் மேற்கொண்டதால், அவரைச் சுற்றி இலைகொடிகளும் புற்றுகளும் படர்ந்தன. அதன் பிறகுஇ அவர் அப்படியே மாயமாகிவிட்டதாக புராணக் கதைகள் குறிப்பிடுகின்றன.

அதன் உண்மைத்தன்மை குறித்த கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். அதையும் தாண்டி, சமண நெறி வாழ்வியல் சாதுக்களில் முதல் திகம்பர சாதுவாகக் கருதப்படுபவர் பாகுபலி.

இந்த ஆரவாரங்களுக்கிடையேஇ உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிலை நீரால் நனைந்து நின்றது. சூரிய அஸ்தமனம் நெருங்க நெருங்க, மேற்குப் புறத்திலிருந்து சிலையின் ஒரு பக்கம் மட்டும் பட்டுத்தெறித்த சூரிய ஒளி, கிரானைட் கல்லால் ஆன அந்தச் சிலையைத் தங்கச் சிலைபோலப் பிரகாசிக்கச் செய்தது. நீர், பால், மஞ்சள், சந்தனம் என 1,008 குடங்களிலிருந்த அபிஷேகப் பொருள்கள் அந்தச் சிலைக்கு வார்க்கப்பட்டன.

கீழிருந்து எந்தச் சலனமுமில்லாமல், அமைதியுடன் தங்களின் ஆதிமுதல்வருக்கு அளிக்கப்படும் மரியாதையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் சமண சாதுக்கள்.

அத்தனை உச்சியில், அவ்வளவு மக்கள் திரளுக்கு இடையே பேரமைதி நிலவிக்கிடந்தது. சமண வாழ்வியல் நெறி உணர்த்துவதும் அந்த அமைதியையும் அகிம்சையும்தான்.

நன்றி இணையம்