அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலில் ஓவியா!!

Loading...

சென்னையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 2017 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஓவியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை டைம்ஸ் நாளிதழ் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்தக் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் 30 பேரின் பெயர்கள் உள்ளன. பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ஓவியா. நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலில் 3 ஆவது இடத்தில் ராகுல் ப்ரீத் சிங்கும், 5 ஆவது இடத்தில் காஜல் அகர்வாலும், 6 ஆவது இடத்தில் ஏமி ஜாக்சனும், 7 ஆவது இடத்தில் ஆண்ட்ரியாவும், 8ஆவது இடத்தில் சஞ்சனா நடராஜனும், 9ஆவது இடத்தில் ரூஹி சிங்கும், 11ஆவது இடத்தில் அதிதி ராவ் ஹைதரியும் உள்ளனர்.

அனுஷ்கா ரைசா வில்சனுக்கு 12ஆவது இடமும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 13 ஆவது இடமும், அனுஷ்காவுக்கு 14 ஆவது இடமும், கீர்த்தி சுரேஷுக்கு 15 ஆவது இடமும், சமந்தாவுக்கு 16 ஆவது இடமும் கிடைத்துள்ளது.

பட்டியலில் தமன்னாவுக்கு 17 ஆவது இடமும், ப்ரியா பவானி சங்கருக்கு 18 ஆவது இடமும், சயீஷாவுக்கு 19 ஆவது இடமும், பிந்து மாதவிக்கு 20 ஆவது இடமும், ஸ்ருதி ஹாஸனுக்கு 21 ஆவது இடமும், த்ரிஷாவுக்கு 23 ஆவது இடமும் கிடைத்துள்ளது.

பட்டியலில் அமலா பாலுக்கு 28 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளவர் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*