அனிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகின்றது, இதில் அனிதாவாக நடிக்க உள்ள பெண் யார் தெரியுமா..?

56
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தனியார் சேனலில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் ஜல்லிக்கட்டு ஜூலி தற்போது பிக் பாஸ் ஜூலி என்று மாறும் அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஜூலி கலந்து கொண்டதன் மூலம் ஜல்லிக்கட்டு புகழ், வீர தமிழச்சி என்றெல்லாம் கூறி முதலில் ஆதரித்த அனைவரிடமும் கெட்ட பெயர் பெற்று பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

பல்வேறு வகையான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தும் கூட சிறிதும் கலங்காமல் மீண்டும் அவர் மனதில் பட்டதையெல்லாம் செய்து வருகிறார்.

தற்போது ஜூலி பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடுவராக இருக்கும் ஓடி விளையாடு பாப்பா என்கிற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

ஏஏதற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்..அந்த வகையில், டாக்டர் அனிதாவின் வாழ்க்கை படமாக உள்ளது, அதில் அனிதாவின் வேடத்தில் ஜூலி நடிக்கிறார்.

தமிழகத்தில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அனிதா என்ற பெண், நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவ கனவு நிறைவேறாமல், போனதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது, தமிழகமே சோகத்தில் முழ்கி இருந்தது.

கல்விக்காக போராடி தன் உயிரை மாய்த்து கொண்ட போராளியான அனிதாவை அவ்வளவு எளிதாக தமிழக மக்களால் மறந்து விட முடியாது, இன்றும் பலரது முக நூல் பக்கங்களில் அனிதாவினது படத்தை பார்க்க முடியும்.. தற்போது அனிதாவின் வாழ்க்கையை படமாக்க உள்ளனர்.

இதில் பிக் பாஸ் ஜூலி அனிதாவாக நடிக்க உள்ளார். இதனை அவரே ட்விட்டரில அறிவித்தும் உள்ளார்.இதனையடுத்து ஜூலி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவர் ஏற்கனவே K7 புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உத்தமி என்ற படத்தில் நடிக்க உள்ளார்,

ஓவியாவிற்கு கூட இந்த அளவிற்கு வாய்ப்புகள், வந்திருக்காது, ஆனால் ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த உடனே வாய்புக்கள் குவிகிறது .