இலங்கை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

20
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது தமது கடவுச்சீட்டை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என இலங்கை சுற்றுலா சபை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரே வெளிநாட்டவர்கள் இந்த நடைமுறையை பின்னபற்ற முடியும் என இலங்கை சுற்றுலா சபை மேலும்அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.