மர்ம நபர்களினால் கிளிநொச்சியில் நபர் ஒருவர் அடித்து கொலை

122
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கிளிநொச்சியில் மர்ம நபர்களினால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் இன்றைய தினம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த நபரின் உறவினர்கள் கனடாவில் வாழ்வதாகவும், கிளிநொச்சி செல்வாநகரில் அவரது காணியை பார்வையிட அடிக்கடி வந்து போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வந்து சென்ற சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.