கிழக்கு மாகாண டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட ஆண், பெண் இரு அணிகளும் முதலிடம்!

50
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி, மட்டக்களப்பு டென்னிஸ் சங்கத்தின் வெட்டுக்காடு உள்ளக விளையாட்டு அரங்கில்  நடைபெற்றது.

இப் போட்டியில், கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என். மதிவண்ணன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தனர்.

இப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து குறித்த மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தி வருகைதந்த ஆண், பெண் அணியினர் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இடம்பெற்ற இறுதிச்சுற்றில் ஆண், பெண் ஆகிய இரு அணியினரும் மட்டக்களப்பு மாவட்டம் முதலாம் இடத்தில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.