கன்னியாவில் கண்டுபிடிக்கப்படட தமிழர்களின் புராதன கல்வெட்டும் மூடி மறைக்கப்படட வரலாறும் – தமிழரின் பூர்வீகம் கேள்விக்குறியாகி நிற்கிறது. உரியவர் கவனிப்பார்களா?

10

இந்துக்களின் புனிதப்பபிரதேசமான திருகோணமலை கன்னியா வெந்நீர்ஊற்றானது உலகப்புகழ்பெற்றதும் பிரசித்தமானதுமானதுமாகும்.

1889 ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வந்த ஒரு இஸ்லாமிய பொதுமகன் அந்தவெந்நீர்ஊற்றுக்கு அருகாமையில் வாழ்ந்துவந்ததாகவும் அவர்தனக்கு உரியதாக 8ஏக்கர் 03 றூட் 26 பேர்ச் இனை தனதாக்கி கொண்டிருந்தா என்பது அறியக்கிடைக்கின்றது.

அவர்தனக்குரிய அக்காணியினை தன் இறப்பின் பின்தன்வழி உறவினர்களுக்கு உரித்தானது என எழுத்து மூலம் வழங்கியிருந்தார். அதனடிப்படையில் அந்த உரிமையாளர் 1956 ஆம்ஆண்டு தனது 8ஏக்கர் 03 றூட் 26 பேர்ச் காணியில் 5 ஏக்கர் 02 றூட் 20 பேர்ச் அளவினை பிரசித்த நொத்தாரிசும் சட்டத்தரணியுமான சுபாசினி அவர்களின் தந்தையார் சித்திரவேலுவின் தந்தையாருக்கு இறுதியாக விற்றுள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.

இற்றைக்கு 62 வருடங்களுக்கு முன்விற்கப்பட்ட காணியினை தற்போது திருகோணமலை இஸ்லாமியசங்கம் தங்கள்பள்ளிவாசலுக்கு உரித்தான காணி என உரிமைகோரி அக்காணியினுள் 52 முஸ்லிம் குடும்பத்தினரைகுடியேற்ற முயற்சித்துவருகின்றனர்.

இதுமுற்றிலும் சட்டத்திற்கு முரணானதும் இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாவும் இருக்கின்றது. கடந்தகாலங்களில் நாட்டின்நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக குறித்த பகுதியிலும் மக்கள்வாழாது பராமரிப்பற்றுகாடு மண்டிக்காணப்பட்டது. காடுமண்டிக்கிடந்த இக்காணியினை துப்பரவுசெய்வதற்கு பிரதேசசெயலாளரிடம் இஸ்லாமிய சங்கம் அனுமதி பெற்றுள்ளது. இக்காணியின் முழுவிபரத்தையும் பெறாது தனியாருக்கு சொந்தமான காணியில் அத்து மீறிநுழைய முறையற்ற விதத்தில் பிரதேசசெயலாளர் இவ்வனுமதியை வழங்கியுள்ளார்.

இந்துக்களின் புனித இடமாக உள்ள இந்த பிரதேசத்தில் பொறுப்பற்றவிதத்தில் அனுமதியளித்தது அவரது பொறுப்பின்மை வெளிப்படுத்துகின்றது. இதற்கானஆதாரம் உள்ளது.

மேலும் 1889 ஆம் ஆண்டு உறுதியை எடுப்பதற்கு காணிபதிவாளர் அலுவகத்தில்விண்ணப்பித்தபோது இந்த உறுதி அழிவடைந்துவிட்டது எனபதில்தரப்பட்டது.

ஆனால் இஸ்லாமிய அமைப்பிற்கு அவ்வுறிதியினை காணிப்பதிவாளர் வழங்கியுள்ளார். அரசஅலுவலகர்களின் நேர்மையற்ற விலை போகும் தன்மையானது, இந்தவிடயத்திலும் மீண்டுமொரு முறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இக்காணி 1956 ஆம் ஆண்டு ரூபா 750.00 விற்பனைசெய்து ஒரு தனிநபர்க்கு

சொந்தமாக்கப்பட்டிருக்கும்போது எவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமானது என முஸ்லிம்சங்கம் உரிமைகோர முடியும்?

இனங்களுக்கிடையே விரிசல்கள் பெருகிக்கிடக்கும் இக்க்காலகட்டத்தில் அவற்றினை ஒன்று சேர்ப்பதில் அக்கறை செலுத்தி பொறுப்புடன் செயல்படவேண்டிய இஸ்லாமியசமூகம் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும்காரியங்களை முன்னெடுப்பது கண்டிக்கப்பட வேண்டியது. மேலும் கன்னியாவில் உள்ள பள்ளிவாசல் காணிக்குள் துப்பரவுசெய்யும்போது கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அது தொடர்பாக அதைக்கண்டவர்கள் கோட்டையில் உள்ளதொல்பொருள் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார். அவர்கள் அதைவெளிப்படுத்தவேண்டாம் எனக்கூறியுள்ளனர்.

பின் அக்கல்வெட்டு பள்ளிவாசல்வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டு வெந்நீர்ஊற்றுதொல்பொருள் ஆய்வாளர்கள் இளைப்பாறும் அறையின்அருகாமையில் ஒளித்துவைத்துள்ளனர்.

அதன்படம்கீழ்இணைக்கப்பட்டுள்ளது.