சிரியாவில் முன்னெடுக்கப்படும் யுத்தத்தினை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிரியாவில் குழந்தைகள் முதல் மனித குலத்திற்கு எதிரான முன்னெடுக்கப்படும் யுத்தத்தினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டுமென கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்டுள்ளார்.

Loading...

சிரியாவில் இடம்பெற்று வரும் சம்பவம் தொடர்பான வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்-

சிரியாவில் முன்னெடுக்கப்படும் அரச படையெடுப்பினால் தினமும் பல குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இறக்கும் நிலையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயத்தில் மௌனமாக இருக்காமல் சிரியாவின் குழந்தைகள் மற்றும் பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித குலத்திற்கு எதிரான முன்னெடுக்கப்படும் யுத்தத்தினை நிறுத்துவதற்கு அனைவரும் குரல்கொடுக்க முன்வர வேண்டுவதுடன்¸ இந்த நல்லாட்சி அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்தி இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனவே சிரியாவில் நடைபெறும் மனித குல படுகொலைக்கு நீதி வேண்டிய அனைத்து மக்களும் இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும்¸ மற்றையவர்களின் நலனுக்காகவும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தங்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*