சிரியப் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம்

Loading...

சிரியாவில் இடம்பெற்றுவரும்  படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கண்டன கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  கண்டன கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

ஜ.நாவே உனது கள்ள மௌனத்தை களை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல், பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு, 2009 முள்ளிவாய்க்கால், 2018 இல் சிரியா, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும்   கண்டன கவனவீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*