ஸ்ரீதேவியை நினைத்து சாந்தனை மறந்த ஈழத்தமிழர்கள்

946
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

புரட்சி பாடகர் எஸ்.ஜி சாந்தனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

ஈழ திருநாட்டில் பல புரட்சி பாடல்கள் மூலம் பலரை தன்வசம் இழுத்த எஸ்.ஜி சாந்தன் கடந்த 26.02.2017 அன்று தனது 51 வயதில் யாழ் போதனா வைத்தியசாலையில் காலமாகினார்.

இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கான பல புரட்சி பாடல்களையும், பல ஈழத்து மதம் சார்ந்த பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்நிலையில் இன்று சாந்தன் அவர்களின்நினைவு தினம் ஆகும்.

ஆனால் இன்று ஈழத்தில் தனி இடத்தை பிடித்த எஸ்.ஜி சாந்தனை மறந்து, இந்தியாவில் நேற்று முன்தினம் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் இறப்பில் துயரை பகிர்ந்து, ஈழத்திற்காக பாடல்கள் மூலம் பல புரட்சிகளை மேற்கொண்ட சாந்தனை மறந்தது குறித்து, சமூக வலைத்தளங்களில் பல ஈழத்து இளைஞர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.