மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று மாலை இடம்பெற்றது.

94
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

பாடசாலை அதிபர் யூ.எல்.அஹமட் லெப்பை தலைமையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான்¸ ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.ஜாபிர் கரீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கான ஓட்ட நிகழ்ச்சி¸ பலூண் உடைத்தல்¸ சந்தைப் புதிர்¸ தொப்பி மாற்றுதல்¸ பாடசாலை ஓட்டம்¸ கயிறு இழுத்தல்¸ விநோத உடை¸ உடற்பயிற்சி கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

இப்போட்டியில் 176 புள்ளிகளைப் பெற்று தாமரை (நீல இல்லம்) முதலாம் இடத்தினையும்¸ 174 புள்ளிகளைப் பெற்று மல்லிகை (பச்சை இல்லம்) இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.