தொடரும் இழுபறியில் ஐ.தே.க உடன் இணையும் கூட்டமைப்பு! சம்பந்தன் கூறிய தகவல்

396
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனி அரசாங்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது என அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தொடர்ந்து கொழும்பு அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்யும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தனித்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் யாரும் பேச்சு நடத்த எம்மை அணுகவில்லை. அவ்வாறு யாரும் அணுகினால், அதுபற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

உள்ளூராட்சித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான தெளிவான செய்தி ஒன்றை மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் அந்த ஆணையை நாங்கள் மதிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.