பாரீஸ் நகரில் 6 பேருக்கு கத்திக்குத்த

585
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில், குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.

குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கும் கேரே டு நார்ட் ரெயில் நிலையத்துக்கு அருகே இச்சம்பவம் நடந்தது.

6 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் நடந்த 2 மணி நேரத்துக்குபிறகு, அந்த மர்ம நபர் மற்றொரு பகுதியில் பிடிபட்டார்.

அவர் குடிபோதையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் பயன்படுத்திய கத்தியும் அருகே கிடந்தது. அந்த ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.