இலங்கையில் மலசல கூடத்திற்கு சென்ற மாணவிக்கு நடந்த பயங்கரம்

ராகலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அள்கரநோயா தோட்டபகுதியில் நேற்று இரவு மலசல கூடத்திற்கு சென்ற 18 வயது பாடசாலை சிறுமி மீது கூட்டு பாலியல் முயற்சிசெய்ததாக கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை ராகலை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த பாடசாலை சிறுமி நேற்று இரவு தனிமையில் மலசலகூடத்திற்கு வெளியே சென்ற வேலையிலேயே இனந் தெரியாதவர்களால் இந்த சம்பவம் மேற்கொள்ளபட்டதாக இராகலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

18 வயது பாடசாலை சிறுமியை கூட்டு பாலியல் வல்லுரவிற்கு முயற்சித்த போது குறித்த சிறுமி சத்தமிட்டதை தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் தப்பி ஒடியதாகவும் தப்பி ஒடிய சந்தேக நபர்களை இன்று காலை கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் நான்கு பேரையும் இன்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் அஜர்படுத்த பட உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*