யாழ்ப்­பாணத்தில் 800 மெ.தொன் நெல் கொள்வனவு!!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 800 மெற்­றிக் தொன் நெல்­லினை நெல் சந்­தைப்­ப­டுத்­தும் சபை பெற்­றுக்­கொள்­ளு­வ­தற்கு தீர்­மானித்­துள்­ளது என மாவட்­டச் செய­லக விவ­சா­யப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் பெரும்­போக நெற் பயிர்ச் செய்கைக்­கா­ன அறு­வடை நடை­பெற்று வரு­கின்­றது. கடந்த வரு­டம் கால நிலை சீர் இன்­மை­யால் 7 ஆயி­ரத்து 91 ஹெக்­டே­யர் நெல் அழி­வுக்­குள்­ளா­கி­யி­ருந்தது.

இந்த முறை சுமார் 3 ஆயி­ரத்து 500 ஹெக்­டே­யர் வரை­யில் மாத்­தி­ரமே அழி­வுக்கு உள்­ளா­கி­யது. இத­னால் 21 ஆயி­ரம் மெற்­றிக் தொன் நெல் உற்­பத்தி இந்த வருட அறு­வ­டை­யில் கிடைக்­கும். இவற்­றில் ஒரு கிலோ நெல் 38 ரூபா வீதம் 800 மெற்­றிக் தொன் நெல்­லினை நெல் சந்­தைப்­ப­டுத்­தும் சபை பெற்­றுக்­கொள்­ள­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*