தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசத் தயார்

நடந்து முடிந்த காரைதீவு பிரதேசசபைத் தேர்தல் பெறுபேற்றின் அடிப்படையில் கூடிய 4 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியிக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரென சுயேச்சைக் குழுத் தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

காரைதீவு மகா சபையின் வழிநடத்தல் குழு சபைச் செயலாளரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாம் தேர்தலுக்கு முன்பு மகாசபை கூட்டிய கூட்டத்தில் எமது காரைதீவு தமிழ் மக்களின் இருப்பு மானம் காப்பாற்றும் வகையில் செயற்படுவதென்றும் எமக்குக் கிடைக்கின்ற ஆசனங்களை எம்மிடையே சுழற்சி முறையில் அனைவரும் பகிர்ந்து சபையை அலங்கரிப்பது என்று தீர்மானம் எடுத்திருந்தோம்.

அன்று வழங்கிய வாக்குறுதிப்படி காரைதீவில் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்க தற்சமயம் அதிகூடிய 4 ஆசனங்களைப் பெற்ற த.தே.கூட்டமைப்புடன் பேசத்தயார் என்று இத்தால் பகிரங்கமாக அறிவிக்கின்றோம்.

தலைவராகிய நான் சி.நந்தேஸ்வரன், மா.புஸ்பநாதன் உள்ளிட்ட நால்வர் தாமாகவே சபைக்குச் செல்வதில்லையென்றும் எக்காரணம் கொண்டும் சபை பொறுப்பை எடுப்பதில்லை என்றும் பெருந்தன்மையுடன் கூறியதற்கமைவாக ஏனைய 8பேருக்கும் 4வருடத்தினுள் சுழற்சி முறையில் அந்த 2 உறுப்பினர் பதவியை சுழற்சி முறையில் வழங்குவதென்றும் தீர்மானமாகியது.

அதற்கமைய திருவுளச்சீட்டின் மூலம் முதல் வருடத்தில் யார் யார் உறுப்பினராக சபையை அலங்கரிப்பது என்றும் அடுத்தடுத்த வருடத்தில் யார் யார் சபைக்குச் செல்வது என்றும் சந்தோசமாக ஏகமனதாக முடிவானது.

எனவே ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆதரவைத் தரவும், த.தே.கூட்டமைப்புடன் பேசவும் நாம் தயார் என குறிப்பிட்டுள்ளார்

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*