வடிவேலுக்கு நடிக்கத் தடை?

555
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

இயக்குனர் சங்கரால் நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமாவில் நடிக்க தடை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

2006ல் வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் அதன் தொடர்ச்சியாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது.

அதற்காக மிக பிரமாண்டமாக அரண்மனை போடப்பட்டது. முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கிய சில நாள்களிலேயே குழப்பத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார் வடிவேலு.

முன்னதாகப் பேசப்பட்ட சம்பளத் தொகை போதாதென்று நினைத்த வடிவேலு அதிக சம்பளத்தை வாங்கிவிட வேண்டும் என்ற திட்டம் போட்டு பிரச்சினையை ஏற்படுத்தினார்.

அதனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடல் சரி இல்லை, பாடலாசிரியர் இவர் வேண்டும் என எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைக்கச் செய்தார். அதனால் இயக்குனர் சிம்பு தேவன், தயாரிப்பாளர் சங்கரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

அதனால் வடிவேல் இனி படங்களில் நடிப்பதற்கு தடை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.