ஏறாவூரில் அடுத்தடுத்து மூன்று தாக்குதல் சம்பவங்கள்!!

87
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தினமான இன்று, ஏறாவூரில் நண்பகல் வரை அடுத்தடுத்து மூன்று தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மூவர் படுகாயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் மேலும் ஒரு ஆதரவாளரும் தாக்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, ஏறாவூர் குமாரவேலியார் கிராமத்தில் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பகுதியில், வாக்காளார்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் மதுபானம் விநியோகித்ததாக பொலிஸ் அவசர பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் குறித்த பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய பிரதேசங்களில் மிகவும் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.